Sunday, July 30, 2017

மாற்றுத்திறனாளிகளுக்கு ’ஸ்மார்ட் கிளாஸ்’

மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒளி, ஒலி மூலம் ஸ்மார்ட் கிளாஸ் நடத்த அரசு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை வழங்கியது. 

ஆனால் அதற்கான போதிய வகுப்பறை இல்லை. தலைமை ஆசிரியர் ராவணன், மதுரை ரக்சனா குழந்தைகள் நல மைய இயக்குனர் ராணி சக்கரவர்த்தி, நீல்கிரிஸ் இயக்குனர் சியாமளாதேவி, ஐ.பி.எம்., மேலாளர் காமராஜ் அண்ணாமலை ஆகியோர் முயற்சியில்  இடவசதி ஏற்படுத்தப்பட்டது. 

சிறப்பு ஆசிரியர் டேனியல் மூலம் பாடம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலுார் கல்வி மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இவ்வகுப்பறையை பயன்படுத்தலாம் என தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment